Monday, April 30, 2012

குற்றியல் உகரம், இகரம்

குற்றியல் உகரம்

என்ன அளபெடைகளை நன்றாக அறிந்து கொண்டாயிற்றா? குற்றியல் உகரம், குற்றியல் இகரம் இரண்டையும் என்னவென்று பார்ப்போம்.

ஒரு மாத்திரை உடைய உகரம் ½ மாத்திரையளவில் குறுகி ஒலிக்கும்போது குற்றியலுகரம் என அழைக்கப்படும். தனிக்குறிலைச் சாராது (தனிக்குறிலுக்கு அடுத்து வராது), வல்லின மெய் மீது ஏறி வரும் உகரம் (கு சு டு து பு று), சொல்லின் இறுதியில் வந்து ஓசை குறைவது “குற்றியலுகரம்” ஆகும். அதாவது தனி நெடில், குறிநெடில், குறிலிணை, வல்லினம், மெல்லினம், இடையினம், ஆய்தம் இவற்றில் ஒன்றினை அடுத்துச் சொல்லின் இறுதியில் நிற்கலாம்.

எ.கா. நாக்கு, காசு

குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை:

1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
4. வன்தொடர்க் குற்றியலுகரம்
5. மென்தொடர்க் குற்றியலுகரம்
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

நெடில் தொடர்க் குற்றியலுகரம்
தனி நெடிலைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். எ.கா. ஆடு, மாடு, ஆறு

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
ஆய்த எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். எ.கா. எஃகு, அஃது

உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
உயிர் எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். ஏற்கனவே நெடில் எழுத்துகள், நெடில் தொடர்க் குற்றியலுகரத்தில் இடம் பெற்றதால், உயிர் மெய் எழுத்தில் உள்ள குறில் எழுத்துகள் மட்டுமே உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் வரும். ஆகவே, இது குறில் தொடர்க் குற்றியலுகரம் என அழைக்கப்படும். உயிர்த்தொடர்க்குற்றியலுகரத்தில் குறைந்தது இரண்டு எழுத்துகளையாவதைத் தொடர்ந்துதான் உகரம் வரும். எ.கா. படகு, உதடு

வன்தொடர்க் குற்றியலுகரம்
வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். எ.கா. பத்து, சாக்கு

மென்தொடர்க் குற்றியலுகரம்
மெல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். எ.கா. பஞ்சு, பந்து

இடைத்தொடர்க் குற்றியலுகரம்
இடையின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். எ.கா. கொய்து, பெய்து, சார்பு

முற்றியலுகரம்
அது என்ன முற்றியலுகரம்? 10 வகை சார்பு எழுத்துகளில் இது வரவில்லையே என்றெண்ண வேண்டாம். தனிக் குறில் எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வந்தால் ஓசை குறையாது. அதனால், அது முற்றியலுகரம் என அழைக்கப்படும். எ.கா. பசு, மறு

அதே போல் மெல்லின, இடையின மெய்கள் மீது ஏறி வரும் உகரம் (ஙு ஞு ணு நு மு நு யு ரு லு வு ழு ளு) முற்றியலுகரம் ஆகும். எ.கா. கணு, தும்மு, வலு, புழு.

குற்றியலிகரம்
உகரம் போலவே இகரம் சில இடங்களில் குறுகி ஒலிப்பது குற்றியலுகரம் ஆகும். இது இரண்டு வகைப்படும்.

1. தனிமொழிக் குற்றியலிகரம்
2. புணர்மொழிக் குற்றியலிகரம்

தனிமொழிக் குற்றியலிகரம்
மியா என்ற அசைச்சொல்லில் ம் என்ற எழுத்தோடு சேர்ந்த இகரம் குறுகும். எ.கா. கேண்மியா, உண்மியா. இந்த சொற்களில் ‘மி’ என்ற எழுத்தில் உள்ள இகரம் ஒரு மாத்திரையில் இருந்து ½ மாத்திரையாக ஒலிக்கும்.

புணர்மொழிக் குற்றியலிகரம்
புணர்மொழிக் குற்றியலிகரம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது உருவாகும் குற்றியலிகரம். இரண்டு சொற்களில், முதலில் வரும் சொல்லின் இறுதியில் குற்றியலுகரம் வந்து அடுத்து வரும் சொல் ‘ய’ என்ற எழுத்தில் தொடங்கும்போது உகரம் இகரமாகத் திரியும். அப்படித் திரிந்து வரும் இகரம் குற்றியலுகரம் போலவே ½ மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். எ.கா. நாடு + யாது = நாடியாது, வரகு + யாது = வரகியாது

21 comments:

  1. It is a typo. kadhavu is a mutRiyalugaram and not kutRiyalugaram. I changed it to "உதடு”. Thanks for pointing this out.

    ReplyDelete
  2. please send me some more words of menthodar kutriyalukaram and idai thodar kutriyalukaram

    ReplyDelete
  3. மென்தொடர்க் குற்றியலுகரம்: நஞ்சு தண்டு சந்து இன்று
    இடைத்தொடர்க் குற்றியலுகரம்: செய்து மார்பு மூழ்கு நேர்பு

    ReplyDelete
  4. sir uyirthodarkutriyalugaram thavarana vilakkam koduthullir.plz check 8th std samacheerkalvi book..

    ReplyDelete
    Replies
    1. Sankari Lakshmi, தமிழிணையப் பல்கலைக்கழகத்திலுள்ள பாடத்திலும் உயிர்த்தொடர்க்குற்றியலுகரம் குறில் தொடர்க்குற்றியலுகரமென்றே விளக்கப்பட்டுள்ளது. சமச்சீர்க்கல்விப் பாடத்திலும் சில வலைப்பூக்ககளிலும் "பண்பாடு, தெரியாது, பாலாறு" போன்ற உதாரணங்களை உயிர்த்தொடர்க்குற்றியலுகரத்திற்குக்கொடுத்திருக்கிறார்கள். இது விவாதத்துக்குரியது. உயிர்த்தொடர்க்குற்றியலுகரத்தில் குறைந்தது இரண்டு எழுத்துகளையாவதைத் தொடர்ந்துதான் உகரம் வரும்.

      Delete
    2. So how much mathorai for kiyriya lugaram one or half. Pls tell since I have my exam

      Delete
  5. Kutriyalugaram senmiya

    ReplyDelete
  6. Thank u.I have a doudt with kutrialugaram letters.It clearly explains it.😊

    ReplyDelete
  7. Kutriyalugaram vachi oru project panna poren. Will share the link once it is completed

    ReplyDelete
  8. Ennupeyar kalil kutriyalukara sorkal ena ena iruku nu solunha

    ReplyDelete