ஒரு சொல்லின் முதலிலோ, நடுவிலோ, இறுதியிலோ ஓர் எழுத்திற்குப் பதிலாக மற்றோர் எழுத்து வந்து பொருள் மாறாமல் உணர்த்துவது எழுத்துப் போலி எனப்படும். ’போலி’ என்றால் ‘போல நிற்பது’ என்று பொருள்.
வகைகள்
1. முதற்போலி
2. இடைப்போலி
3. கடைப்போலி
முதற்போலி
ஒரு சொல்லின் முதல் எழுத்திற்குப் பதில் வேறு எழுத்து வருவது முதற்போலி ஆகும்.
பசல் – பைசல்
மஞ்சு – மைஞ்சு
மயல் – மையல்
இந்த சொற்களில் ‘அ’கரத்திற்குப் (ப, ம) போலியாக ‘ஐ’காரம் (பை, மை) வந்திருக்கின்றன.
இடைப்போலி
ஒரு சொல்லின் இடையில் ஓர் எழுத்திற்குப் பதில் வேறு எழுத்து வருவது இடைப்போலி ஆகும்.
அரயர் – அரையர்
இலஞ்சி – இலைஞ்சி
இந்த சொற்களில் ‘அ’கரத்திற்குப் (ப, ம) போலியாக ‘ஐ’காரம் (பை, மை) வந்திருக்கின்றன.
கடைப்போலி
ஒரு சொல்லின் இறுதியில் ஓர் எழுத்திற்குப் பதில் வேறு எழுத்து வருவது இடைப்போலி ஆகும்.
நலம் – நலன்
நிலம் – நிலன்
இந்த சொற்களில் ‘ம’கர ஒற்றுக்குப் (ம்) போலியாக ‘ன’கர ஒற்று (ன்) வந்திருக்கின்றன.
முற்றுப்போலி
ஒரு சொல்லின் முதல், இடை, கடை என அனைத்து எழுத்துகளும் வேறுபட்டிடுப்பினும் பொருள் மாறாமல் வந்தால் முற்றுப்போலி ஆகும்.
ஐந்து – அஞ்சு
ஐந்து எனும் சொல்லில் முதல், இடை, கடை என அனைத்து எழுத்துகளும் மாறினாலும் (ஐ – அ, ந் – ஞ், து – சு) ‘ஐந்து’ என்ற பொருளையேக் குறிக்கிறது.
முன் பின்னாகத் தொக்க போலி
ஒரு சொல்லில் எழுத்துகல் முன் பின்னாக் மாறி நின்றபோதும், பொருள் மாறாமல் வந்தால் முன் பின்னாகத் தொக்க போலி ஆகும்.
தசை - சதை
இத்துடன் எழுத்து இலக்கணம் நிறைவுற்றது. இனி வரும் நாட்களில் சொல் இலக்கணம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
No comments:
Post a Comment